பாடல் 991
திருகு செறிந்த குழலை வகிர்ந்து
- தலம்
- விசுவை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனந்த தனன தனந்ததனன தனந்ததனதான
பாடல் வரிகள்
திருகு செறிந்த குழலை வகிர்ந்துமுடிமலர் கொண்டொரழகாகச்
செயவரு துங்க முகமும் விளங்கமுலைகள் குலுங்கவருமோக
அரிவையர் தங்கள் வலையில் விழுந்துஅறிவு மெலிந்துதளராதே
அமரர் மகிழ்ந்து தொழுது வணங்குனடியிணை யன்பொடருள்வாயே
வரையை முனிந்து விழவெ கடிந்துவடிவெ லெறிந்ததிறலோனே
மதுரித செஞ்சொல் குறமட மங்கைநகிலது பொங்கவரும்வேலா
விரைசெறி கொன்றை யறுக புனைந்தவிடையரர் தந்தமுருகோனே
விரைமிகு சந்து பொழில்கள் துலங்குவிசுவை விளங்குபெருமாளே.
