உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 990

ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தான தான தனத்த, தான தான தனத்ததான தான தனத்ததனதான

பாடல் வரிகள்

ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்குமால கால விழிக்குமுறுகாதல்

ஆசை மாத ரழைக்கு மோசை யான தொனிக்குமார பார முலைக்குமழகான

ஓலை மேவு குழைக்கு மோடை யானை நடைக்குமோரை சாயு மிடைக்குமயல்மேவி

ஊறு பாவ வுறுப்பி லு¡றல் தேறு கரிப்பிலு¡ர வோடு விருப்பிலுழல்வேனோ

வேலை யாக வளைக்கை வேடர் பாவை தனக்குமீறு காத லளிக்குமுகமாய

மேவு வேடை யளித்து நீடு கோல மளித்துமீள வாய்மை தெளித்துமிதண்மீது

மாலை யோதி முடித்து மாது தாள்கள் பிடித்துவாயி லு¡றல் குடித்துமயல்தீர

வாகு தோளி லணைத்து மாக மார்பொழி லுற்றவாகை மாநகர் பற்றுபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →