பாடல் 778
அளிசுழ லளகக் காடு காட்டவும்
- தலம்
- கரியவனகர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தனனத் தான தாத்தனதனதன தனனத் தான தாத்தனதனதன தனனத் தான தாத்தனதனதான
பாடல் வரிகள்
அளிசுழ லளகக் காடு காட்டவும்விழிகொடு கலவித் தீயை மூட்டவும்அமளியில் முடியப் போது போக்கவும்இளைஞோர்கள்
அவர்வச மொழுகிக் காசு கேட்கவும்அழகிய மயிலிற் சாயல் காட்டவும்அளவிய தெருவிற் போயு லாத்தவும்அதிபார
இளமுலை மிசையிற் று¡சு நீக்கவும்முகமொடு முகம்வைத் தாசை யாக்கவும்இருநிதி யிலரைத் தூர நீக்கவும்இனிதாக
எவரையு மளவிப் போய ணாப்பவும்நினைபவ ரளவிற் காதல் நீக்கியென்இடரது தொலையத் தாள்கள் காட்டிநின்அருள்தாராய்
நெளிபடு களமுற் றாறு போற்சுழல்குருதியில் முழுகிப் பேய்கள் கூப்பிடநிணமது பருகிப் பாறு காக்கைகள்கழுகாட
நிரைநிரை யணியிட் டோரி யார்த்திடஅதிர்தரு சமரிற் சேனை கூட்டியநிசிசரர் மடியச் சாடு வேற்கொடுபொரும்வீரா
களிமயில் தனில்புக் கேறு தாட்டிகஅழகிய கனகத் தாம மார்த்தொளிர்கனகிரி புயமுத் தார மேற்றருள்திருமார்பா
கரியவ னகரிற் றேவ பார்ப்பதியருள்சுத குறநற் பாவை தாட்பணிகருணைய தமிழிற் பாடல் கேட்டருள்பெருமாளே.
