உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 777

விடமெனமி குத்தவட வனலென வுயர்த்துரவி

தலம்
சீகாழி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதனன தத்ததன தனதனன தத்ததனதனதனன தத்ததனதனதான

பாடல் வரிகள்

விடமெனமி குத்தவட வனலென வுயர்த்துரவிவிரிகதி ரெனப்பரவுநிலவாலே

விதனமிக வுற்றுவரு ரதிபதி கடுத்துவிடுவிரைதரு விதட்கமலகணையாலே

அடலமரி யற்றுதிசை யினில்மருவி மிக்கவனல்அழலொடு கொதித்துவருகடைநாளில்

அணுகிநம னெற்றமயல் கொளுமநிலை சித்தமுறஅவசமொ டணைத்தருளவரவேணும்

அடவிதனில் மிக்கபரு வரையவ ரளித்ததிருஅனையமயில் முத்தமணிசுரயானை

அழகிய மணிக்கலச முலைகளில் மயக்கமுறுமதிவிரக சித்ரமணிமயில்வீரா

கடதடக ளிற்றுமுக ரிளையவ கிரிக்குமரிகருணையொ டளித்ததிறமுருகோனே

கமலமல ரொத்தவிழி யரிமருக பத்தர்பணிகழுமலந கர்க்குமரபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →