பாடல் 779
உ ரத்துறை போதத் ...... தனியான
- ராகம்
- வாசஸ்பதி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - சதுஸ்ர ஜம்பை (7)தனத்தன தானத்தனதான
பாடல் வரிகள்
உ ரத்துறை போதத்தனியான
உ னைச்சிறி தோதத்தெரியாது
மரத்துறை போலுற்றடியேனும்
மலத்திருள் மூடிக்கெடலாமோ
பரத்துறை சீலத்தவர்வாழ்வே
பணித்தடி வாழ்வுற்றருள்வோனே
வரத்துறை நீதர்க்கொருசேயே
வயித்திய நாதப்பெருமாளே.
