பாடல் 702
விலைய றுக்கவு முலைம றைக்கவு
- தலம்
- மாடம்பாக்கம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தத்தன தனன தத்தனதனந்தந் தந்த தந்தா------ 3 முறை ------தனதனா தனனா
பாடல் வரிகள்
விலைய றுக்கவு முலைம றைக்கவுமணந்துன் றுஞ்செ ழுந்தார்
புனைமு கிற்குழல் தனைய விழ்க்கவும்விடங்கஞ் சஞ்ச ரஞ்சேர்
விழிவெ ருட்டவு மொழிபு ரட்டவுநிணந்துன் றுஞ்ச லம்பாயுதிரநீ ருடனே
வெளியி னிற்கவும் வலிய முட்டரையெதிர்ந்தும் பின்தொ டர்ந்தே
யிலைசு ணப்பொடி பிளவெ டுத்திடைதிரும்பும் பண்ப ரன்றே
யெனவு ரைத்தவர் தமைவ ரப்பணியுடன்கொண் டன்பு டன்போய்சயனபா யலின்மேல்
கலைநெ கிழ்க்கவு மயல்வி ளைக்கவுநயங்கொண் டங்கி ருந்தே
குணுகி யிட்டுள பொருள்ப றித்தறமுனிந்தங் கொன்று கண்டே
கலக மிட்டவ ரகல டித்தபின்வரும்பங் கங்கு ணங்கோர்புதியபே ருடனே
கதைகள் செப்பவும் வலச மர்த்திகள்குணங்கண் டுந்து ளங்கா
மனித னிற்சிறு பொழுது முற்றுறநினைந்துங் கண்டு கந்தே
கடிம லர்ப்பத மணுகு தற்கறிவிலன் பொங்கும் பெரும்பாதகனையா ளுவையோ
சிலைத னைக்கொடு மிகஅ டித்திடமனந்தந் தந்தண ந்தா
மரைம லர்ப்பிர மனைந டுத்தலையரிந்துங் கொண்டி ரந்தே
திரிபு ரத்தெரி புகந கைத்தருள்சிவன்பங் கங்கி ருந்தாளருளுமா முருகா
செருவி டத்தல கைகள் தெனத்தெனதெனந்தெந் தெந்தெ னந்தா
எனஇ டக்கைகள் மணிக ணப்பறைடிகுண்டிங் குண்டி குண்டா
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகுடிகுண்டிங் குண்டி குண்டீயெனஇரா வணனீள்
மலையெ னத்திகழ் முடிகள் பத்தையுமிரண்டஞ் சொன்ப தொன்றேய்
பணைபு யத்தையு மொருவ கைப்படவெகுண்டம் பொன்றெ றிந்தோன்
மதலை மைத்துன அசுர ரைக்குடல்திறந்தங் கம்பி ளந்தேமயிலின்மேல் வருவாய்
வயல்க ளிற்கய லினமி குத்தெழுவரம்பின் கண்பு ரண்டே
பெருக யற்கொடு சொரியு நித்திலநிறைந்தெங் குஞ்சி றந்தே
வரிசை பெற்றுயர் தமனி யப்பதியிடங்கொண் டின்பு றுஞ்சீர்இளைய நாயகனே.
