பாடல் 703
ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி யி ருந்து
- தலம்
- கோடைநகர்
- ராகம்
- மாயா மாளவ கெளளை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (5 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தானதன தான தந்த தானதன தான தந்ததானதன தான தந்ததனதான
பாடல் வரிகள்
ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி யி ருந்துஆகமல மாகி நின்றுபுவிமீதில்
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்துஆளழக னாகி நின்றுவிளையாடிப்
பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்துபூமிதனில் வேணு மென்றுபொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழவெளநேரகெய் தாம லுன்றன்பூவடிகள் சேர அன்புதருவாயே
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்றதீரனரி நார ணன்றன்மருகோனே.
தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்றுதேடஅரி தான வன்றன்முருகோனே
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்றகோமளிய நாதி தந்தகுமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்டகோடைநகர் வாழ வந்தபெருமாளே.
