பாடல் 701
தோடு றுங் குழை யாலே கோல்வளை
- தலம்
- மாடம்பாக்கம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தந்தன தானா தானனதான தந்தன தானா தானனதான தந்தன தானா தானனதனதான
பாடல் வரிகள்
தோடு றுங் குழை யாலே கோல்வளைசூடு செங்கைக ளாலே யாழ்தருகீத மென்குர லாலே தூமணிநகையாலே
தூம மென்குழ லாலே யூறியதேனி லங்கித ழாலே யாலவிலோச னங்களி னாலே சோபிதஅழகாலே
பாட கம்புனை தாளா லேமிகவீசு தண்பனி நீரா லேவளர்பார கொங்கைக ளாலே கோலியவிலைமாதர்
பாவ கங்களி னாலே யான்மயல்மூழ்கி நின்றய ராதே நூபுரபாத பங்கய மீதே யாள்வதுகருதாயோ
நாட ருஞ்சுடர் தானா வோதுசிவாக மங்களி னானா பேதவநாத தந்த்ரக லாமா போதகவடிவாகி
நால்வி தந்தரு வேதா வேதமுநாடி நின்றதொர் மாயா தீதமனோல யந்தரு நாதா ஆறிருபுயவேளே
வாட யங்கியவேலா லேபொருசூர்த டிந்தருள் வீரா மாமயிலேறு கந்தவி நோதா கூறெனஅரனார்முன்
வாச கம்பிற வாதோர் ஞானசுகோத யம்புகல் வாசா தேசிகமாடை யம்பதி வாழ்வே தேவர்கள்பெருமாளே.
