பாடல் 618
அரிவையர்கள் தொடரு மின்பத்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2தனதனன தனன தந்தத்தனதனன தனன தந்தத்தனதனன தனன தந்தத்தனதான
பாடல் வரிகள்
அரிவையர்கள் தொடரு மின்பத்துலகுநெறி மிகம ருண்டிட்டசடனென மனது நொந்திட்டயராமல்
அநுதினமு முவகை மிஞ்சிச்சுகநெறியை விழைவு கொண்டிட்டவநெறியின் விழையு மொன்றைத்தவிர்வேனோ
பரிதிமதி நிறைய நின்றஃதெனவொளிரு முனது துங்கப்படிவமுக மவைகள் கண்டுற்றகமேவும்
படர்கள்முழு வதும கன்றுட்பரிவினொடு துதிபு கன்றெற்பதயுகள மிசைவ ணங்கற்கருள்வாயே
செருவிலகு மசுரர் மங்கக்குலகிரிகள் நடுந டுங்கச்சிலுசிலென வலைகு லுங்கத்திடமான
செயமுதவு மலர்பொ ருங்கைத்தலமிலகு மயில்கொ ளுஞ்சத்தியைவிடுதல் புரியு முன்பிற்குழகோனே
கருணைபொழி கிருபை முந்தப்பரிவினொடு கவுரி கொஞ்சக்கலகலென வருக டம்பத்திருமார்பா
கரிமுகவர் தமைய னென்றுற்றிடுமிளைய குமர பண்பிற்கநககிரி யிலகு கந்தப்பெருமாளே.
