பாடல் 619
மருவுமலர் வாச முறுகுழலி னாலும்
- தலம்
- புகழிமலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனதன தான தனனதன தானதனனதன தானதனதான
பாடல் வரிகள்
மருவுமலர் வாச முறுகுழலி னாலும்வரிவிழியி னாலுமதியாலும்
மலையினிக ரான இளமுலைக ளாலுமயல்கள்தரு மாதர்வகையாலும்
கருதுபொரு ளாலு மனைவிமக வானகடலலையில் மூழ்கிஅலைவேனோ
கமலபத வாழ்வு தரமயிலின் மீதுகருணையுட னேமுன்வரவேணும்
அருமறைக ளோது பிரமன்முதல் மாலும்அமரர்முநி ராசர்தொழுவோனே
அகிலதல மோது நதிமருவு சோலைஅழகுபெறு போகவளநாடா
பொருதவரு சூரர் கிரியுருவ வாரிபுனல்சுவற வேலையெறிவோனே
புகலரிய தான தமிழ்முநிவ ரோதுபுகழிமலை மேவுபெருமாளே.
