உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 617

பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை

தாளம்
மிஸ்ரசாபு (3 1/2)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தகிட-1 1/2, தகதிமி-2தாத்த தனதன தாத்த தனதனதாத்த தனதன தாத்த தனதனதாத்த தனதன தாத்த தனதனதனதான

பாடல் வரிகள்

பாட்டி லுருகிலை கேட்டு முருகிலைகூற்று வருவழி பார்த்து முருகிலைபாட்டை யநுதின மேற்று மறிகிலைதினமானம்

யாப்ப ணியனருள் வீட்டை விழைகிலைநாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலைபாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல்வழிபோக

மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலையேட்டின் விதிவழி யோட்ட மறிகிலைபார்த்து மினியொரு வார்த்தை அறைகுவனிதுகேளாய்

வாக்கு முனதுள நோக்கு மருளுவனேத்த புகழடி யார்க்கு மெளியனைவாழ்த்த இருவினை நீக்கு முருகனைமருவாயோ

ஆட்டி வடவரை வாட்டி யரவொடுபூட்டி திரிபுர மூட்டி மறலியினாட்ட மறசர ணீட்டி மதனுடல்திருநீறாய்

ஆக்கி மகமதை வீட்டி யொருவனையாட்டின் முகமதை நாட்டி மறைமகளார்க்கும் வடுவுற வாட்டு முமையவனருள்பாலா

சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருறஓட்டி யழல்பசை காட்டி சமணரைசீற்ற மொடுகழு வேற்ற அருளியகுருநாதா

தீர்த்த எனதக மேட்டை யுடனினைஏத்த அருளுட னோக்கி அருளுதிதீர்த்த மலைநகர் காத்த சசிமகள்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →