பாடல் 576
கரதல முங்குறி கொண்ட கண்டமும்
- தலம்
- விராலிமலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தந்தன தந்த தந்தனதனதன தந்தன தந்த தந்தனதனதன தந்தன தந்த தந்தனதனதான
பாடல் வரிகள்
கரதல முங்குறி கொண்ட கண்டமும்விரவியெ ழுந்துசு ருண்டு வண்டடர்கனவிய கொண்டைகு லைந்த லைந்திடஅதிபாரக்
களபசு கந்தமி குந்த கொங்கைகளிளகமு யங்கிம யங்கி யன்புசெய்கனியித ழுண்டுது வண்டு பஞ்சணைமிசைவீழா
இரதம ருந்தியு றுங்க ருங்கயல்பொருதுசி வந்துகு விந்தி டும்படியிதவிய வுந்தியெ னுந்த டந்தனிலுற்முழ்கி
இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய்வனிதையர் தங்கள்ம ருங்கி ணங்கியஇளமை கிழம்படு முன்ப தம்பெறவுணர்வேனோ
பரத சிலம்புபு லம்பு மம்பதவரிமுக எண்கினு டன்கு ரங்கணிபணிவிடை சென்றுமு யன்ற குன்றணியிடையேபோய்ப்
பகடியி லங்கை கலங்க அம்பொனின்மகுடசி ரந்தச முந்து ணிந்தெழுபடியுந டுங்கவி ழும்ப னம்பழமெனவாகும்
மருதமு தைந்தமு குந்த னன்புறுமருககு விந்தும லர்ந்த பங்கயவயலியில் வம்பவிழ் சண்ப கம்பெரியவிராலி
மலையில் விளங்கிய கந்த என்றுனைமகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனைவழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள்பெருமாளே.
