பாடல் 577
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
(எடுப்பு - 1/2 தள்ளி)தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
பாடல் வரிகள்
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடிகயிலை யாளி காபாலிகழையோனி
கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளிகணமொ டாடி காயோகிசிவயோகி
பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடிபகரொ ணாத மாஞானிபசுவேறி
பரத மாடி கானாடி பரவ யோதி காதீதபரம ஞான வூர்பூதஅருளாயோ
சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவிதுரக கோப மீதோடிவடமேரு
சுழல வேலை தநமுள அழுத ளாவி வாய்பாறிசுரதி னோடு சூர்மாளவுலகேழும்
திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாளதிரளி னோடு பாறோடுகழுகாடச்
செருவி னாடு வானீப கருணை மேரு வேபாரதிருவி ராலி யூர்மேவுபெருமாளே.
