பாடல் 542
எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
- ராகம்
- ஹிந்தோளம்
- தாளம்
- ஆதி-தேசாதி (8)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தான தனதனன தானதனதனன தானதனதான
பாடல் வரிகள்
எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதியிலகுமரன் மூவர்முதலானோர்
இறைவியெனு மாதி பரைமுலையி னுறியெழுமமிர்த நாறுகனிவாயா
புழுகொழுகு காழி கவுணியரில் ஞானபுநிதனென ஏடுதமிழாலே
புனலிலெதி ரேற சமணர்கழு வேறபொருதகவி வீரகுருநாதா
மழுவுழைக பால டமரகத்ரி சூலமணிகரவி நோதரருள்பாலா
மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலைவளமைபெற வேசெய்முருகோனே
கழுகுதொழு வேத கிரிசிகரி வீறுகதிருலவு வாசல்நிறைவானோர்
கடலொலிய தான மறைதமிழ்க ளோதுகதலிவன மேவுபெருமாளே.
