பாடல் 543
ஓல மிட்ட சுரும்பு தனா தனாவென
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தத்த தனந்த தனா தனாதனதான தத்த தனந்த தனா தனாதனதான தத்த தனந்த தனா தனாதனதனனதான
பாடல் வரிகள்
ஓல மிட்ட சுரும்பு தனா தனாவெனவேசி ரத்தில் விழுங்கை பளீர் பளீரெனவோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரெனவிரகலீலை
ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவெனவேர்வை மெத்த வெழுந்து சலா சலாவெனரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரெனஅமுதமாரன்
ஆல யத்து ளிருந்து குபீர் குபீரெனவேகு திக்க வுடம்பு விணர் விணரெனஆர முத்த மணிந்து அளா வளாவெனமருவுமாதர்
ஆசை யிற்கை கலந்து சுமா சுமாபவசாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம்ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவெனவகைவராதோ
மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலெனமேலெ ழுச்சி தரும்பல் வெளேல் வெளேலெனவாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலெனஎதிர்கொள்சூரன்
மார்பு மொக்க நெரிந்து காணல் காணலெனபேய்கு திக்க நிணங்கள்ழு ழுவெனவாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோவெனஉதிரமாறாய்
வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீலெனமாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலெனமேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவெனவிசைகள்கூற
வேலெ டுத்து நடந்த திவா கராசலவேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ்வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவகுமரவேளே.
