உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 541

அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத்த தத்தம் தத்தன தானனதனத்த தத்தம் தத்தன தானனதனத்த தத்தம் தத்தன தானனதனதான

பாடல் வரிகள்

அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சிலதினத்து மற்றொன் றுற்றறி யாதுபின்அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடுகணையாலே

அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர்நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெஅலக்க ணிற்சென் றுத்தடு மாறியெசிலநாள்போய்

இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன்மயக்கி லுற்றம் பற்றைவி டாதுடலிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரைமுதிர்வாயே

எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன்மலர்ப்ப தத்தின் பத்திவி டாமனதிருக்கு நற்றொண் டர்க்கிணை யாகவுனருள்தாராய்

புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடிபடச்சி ரித்தண் முப்புர நீறுசெய்புகைக்க னற்கண் பெற்றவர் காதலியருள்பாலா

புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயரசனைத்து முற்றுஞ் செற்றிட வேபகைபுகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன்மருகோனே

திகழ்க்க டப்பம் புட்பம தார்புயமறைத்து ருக்கொண் டற்புத மாகியதினைப்பு னத்தின் புற்றுறை பாவையையணைசீலா

செகத்தி லுச்சம் பெற்றம ராவதியதற்கு மொப்பென் றுற்றழ கேசெறிதிருக்க ழுக்குன் றத்தினில் மேவியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →