உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 403

இருளளக மவிழமதி போத முத்த ரும்ப

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதனன தனதனன தான தத்த தந்ததனதனன தனதனன தான தத்த தந்ததனதனன தனதனன தான தத்த தந்ததனதான

பாடல் வரிகள்

இருளளக மவிழமதி போத முத்த ரும்பஇலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள்இளகஇடை துவளவளை பூச லிட்டி ரங்கஎவராலும்

எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தியினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்தஇதழமுது பருகியுயிர் தேக மொத்தி ருந்துமுனிவாறி

மருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்துமுகவனச மலர்குவிய மோக முற்ற ழிந்துமொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்துவிடுபோதும்

முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்தபழுதில்மறை பயிலுவஎ னாத ரித்து நின்றுமுநிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்றுமறவேனே

ஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்துகிழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்துஉலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்துசபையூடே

ஒருபழைய சருகுமடி ஆவ ணத்தை யன்றுஉரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்றுஉதறிமுறை யிடுபழைய வேத வித்தர் தந்தசிறியோனே

அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொடழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்தஅமரரொடு பலர்முடுகி ஆழி யைக்க டைந்துஅமுதாக

அருளுமரி திருமருக வார ணத்தை யன்றுஅறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்தஅருணகிரி நகரிலெழு கோபு ரத்த மர்ந்தபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →