பாடல் 402
இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்ததனதன தாந்த தந்ததனதான
பாடல் வரிகள்
இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பையிடரடை பாழ்ம்பொ தும்பகிதவாரி
இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்பமிரவிடை தூங்கு கின்றபிணநோவுக்
குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொடுயிர்குடி போங்கு ரம்பையழியாதென்
றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்துனுபயப தாம்பு யங்களடைவேனோ
அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்களமரர் குழாங்கு விந்துதொழவாழும்
அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்டஅபிநவ சார்ங்க கண்டன்மருகோனே
கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்டகடவுள்ந டேந்த்ரர் மைந்தவரைசாடுங்
கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்தகரகுலி சேந்த்ரர் தங்கள்பெருமாளே.
