பாடல் 404
இறுகு மணிமுலை மருவு தரளமு
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனதன தனன தனதனதனன தனதனதனதான
பாடல் வரிகள்
இறுகு மணிமுலை மருவு தரளமுமெரியு முமிழ்மதிநிலவாலே
இரவி யெனதுயிர் கவர வருகுழலிசையி லுறுகடலலையாலே
தறுகண் ரதிபதி மதனன் விடுகொடுசரமி லெளியெனுமழியாதே
தருண மணிபொழி லருணை நகருறைசயில மிசையினில்வரவேணும்
முறுகு திரிபுர மறுகு கனலெழமுறுவ லுடையவர்குருநாதா
முடிய கொடுமுடி யசுரர் பொடிபடமுடுகு மரகதமயில்வீரா
குறவர் மடமக ளமுத கனதனகுவடு படுமொருதிருமார்பா
கொடிய சுடரிலை தனையு மெழுகடல்குறுக விடவலபெருமாளே.
