பாடல் 358
உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே
- தலம்
- திருவானைக்கா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்தா தனத்தா தனத்தா தனத்தாதனத்தா தனத்தானதந்ததான
பாடல் வரிகள்
உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பேருனக்கோ மடற்கோவையொன்றுபாட
உழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தேடுனைப்பாரி லொப்பார்கள்கண்டிலேன்யான்
குரைக்கான வித்யா கவிப்பூ பருக்கேகுடிக்காண் முடிப்போடுகொண்டுவாபொன்
குலப்பூ ணிரத்நா திபொற்று செடுப்பாயெனக்கூ றிடர்ப்பாடின்மங்குவேனோ
அரைக்காடை சுற்றார் தமிழ்க்கூட லிற்போய்அனற்கே புனற்கேவரைந்தஏடிட்
டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சேலறப்பாய் வயற்கீழமர்ந்தவேளே
திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தேசிவத்யான முற்றோர்சிலந்திநூல்செய்
திருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர்திருச்சால கச்சோதிதம்பிரானே.
