பாடல் 357
ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச
- தலம்
- திருவானைக்கா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தத்தன தத்தன தத்தனதான தத்தன தத்தன தத்தனதான தத்தன தத்தன தத்தனதனதான
பாடல் வரிகள்
ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தசனாக மக்கலை கற்றச மர்த்திகளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர்தெருவூடே
ஆர வட்டமு லைக்குவி லைப்பணமாயி ரக்கல மொட்டிய ளப்பினுமாசை யப்பொரு ளொக்கந டிப்பவருடன்மாலாய்
மேலி ளைப்புமு சிப்பும வத்தையுமாயெ டுத்தகு லைப்பொடு பித்தமுமேல்கொ ளத்தலை யிட்டவி திப்படியதனாலே
மேதி னிக்குள பத்தனெ னப்பலபாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகைவீடு கட்டியி ருக்குமெ னக்குநினருள்தாராய்
பீலி மிக்கம யிற்றுர கத்தினிலேறி முட்டவ ளைத்துவ குத்துடல்பீற லுற்றவு யுத்தக ளத்திடைமடியாத
பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனைபேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர்பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழுகுடனாட
ஏலம் வைத்தபு யத்தி லணைத்தருள்வேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர்ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவையருள்வோனே
ஏழி சைத்தமி ழிற்பய னுற்றவெணாவ லுற்றடி யிற்பயி லுத்தமஈசன் முக்கணி ருத்தன ளித்தருள்பெருமாளே.
