பாடல் 359
ஓல மறைக ளறைகின்ற வொன்றது
- தலம்
- திருவானைக்கா
- ராகம்
- ஹம்ஸாநந்தி
- தாளம்
- அங்கதாளம் (7 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2தான தனன தனதந்த தந்தனதான தனன தனதந்த தந்தனதான தனன தனதந்த தந்தனதனதான
பாடல் வரிகள்
ஓல மறைக ளறைகின்ற வொன்றதுமேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்ததுபோத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்ஊனு முயிரு முழுதுங் கலந்ததுசிவஞானம்
சால வுடைய தவர்கண்டு கொண்டதுமூல நிறைவு குறைவின்றி நின்றதுசாதி குலமு மிலதன்றி யன்பர்சொனவியோமஞ்
சாரு மநுப வரமைந்த மைந்தமெய்வீடு பரம சுகசிந்து இந்த்ரியதாப சபல மறவந்து நின்கழல்பெறுவேனோ
வால குமர குககந்த குன்றெறிவேல மயில எனவந்து கும்பிடுவான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர்களைவோனே
வாச களப வரதுங்க மங்கலவீர கடக புயசிங்க சுந்தரவாகை புனையும் ரணரங்க புங்கவவயலுரா
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்நீலி கவுரி பரைமங்கை குண்டலிநாளு மினிய கனியெங்க ளம்பிகைத்ரிபுராயி
நாத வடிவி யகிலம் பரந்தவளாலி னுதர முளபைங் கரும்புவெணாவ லரசு மனைவஞ்சி தந்தருள்பெருமாளே.
