பாடல் 217
சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ
- தலம்
- சுவாமி மலை
- ராகம்
- மாயா மாளவ கெளளை
- தாளம்
- சதுஸ்ர த்ருவம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
கண்ட நடை (35), எடுப்பு /4/4/4 0நடை தகிடதகதத்ததன தத்ததன தத்ததன தத்ததனதத்ததன தத்ததன தத்ததன தத்ததனதத்ததன தத்ததன தத்ததன தத்ததனதந்ததான
பாடல் வரிகள்
சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொடப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகைசுக்கிலம் விளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர்சங்முளை
துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகுகுட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலிதுச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிகவங்க்முடே
எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுறலெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமைஎத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில்பஞ்சபூதம்
எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலையெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல்எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில்மங்குவேனோ
தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலையொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள்சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெளமண்டியோடச்
சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர்கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமெனசக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமே பக்குவிடவென்றவேலா
சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடனழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர்சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநடனங்கொள்வேளே
செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகுறப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறைசிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ்தம்பிரானே.
