உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 218

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த

தாளம்
ஆதி - தேசாதி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதான தத்த தனதான தத்ததனதான தத்ததனதான

பாடல் வரிகள்

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்ததிருமாது கெர்ப்பமுடலு஡றித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்திரமாய ளித்தபொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்மலைநேர்பு யத்திலுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்தமணிவாயின் முத்திதரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்குமுலைமேல ணைக்கவருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்மொழியேயு ரைத்தகுருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்ததனியேர கத்தின்முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்சமர்வேலெ டுத்தபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →