பாடல் 216
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
- தலம்
- சுவாமி மலை
- ராகம்
- கல்யாணி
- தாளம்
- அங்கதாளம் (5 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
(எடுப்பு 1/2 தள்ளி)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தனதனன தான தத்த தனதனன தான தத்ததனதனன தான தத்ததனதான
பாடல் வரிகள்
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்தவமுறைதி யானம் வைக்கஅறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்ததமியன்மிடி யால்ம யக்கமுறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்புகயிலைமலை நாதர் பெற்ற குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சைகமழுமண மார்க டப்பமணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்யசகலசெல்வ யோக மிக்கபெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்துதவிபுரிய வேணு நெய்த்தவடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்கஅரியதமிழ் தான ளித்தமயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்தஅழகதிரு வேர கத்தின்முருகோனே.
