பாடல் 212
காமியத் தழுந்தி ...... யிளையாதே
- தலம்
- சுவாமி மலை
- ராகம்
- பீம்பளாஸ்
- தாளம்
- ஆதி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானனத் தனந்ததனதான
பாடல் வரிகள்
காமியத் தழுந்தியிளையாதேகாலர்கைப் படிந்துமடியாதே
ஓமெழுத்தி லன்புமிகவூறிஓவியத்தி லந்தமருள்வாயே
தூமமேய்க் கணிந்தசுகலீலாசூரனைக் கடிந்தகதிர்வேலா
ஏமவெற் புயர்ந்தமயில்வீராஏரகத் தமர்ந்தபெருமாளே.
