பாடல் 213
குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி
- தலம்
- சுவாமி மலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தனதனன தனனா தனத்ததனதனதனன தனதனன தனனா தனத்ததனதனதனன தனதனன தனனா தனத்ததனதனதான
பாடல் வரிகள்
குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமிகணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமுமுருகாதே
குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்தெருவிலத வரதமன மெனவே நடப்பர்நகைகொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்களனைவோரும்
தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்முலையிலுறு துகில்சரிய நடுவீதி நிற்பவர்கள்தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண்வலையாலே
சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்வசமொழுகி யவரடிமை யெனமாத ரிட்டதொழில்தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள்தருவாயே
சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழுதொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனிதனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடுசெருமீதே
தவனமொடு மலகைநட மிடவீர பத்திரர்களதிரநிண மொடுகுருதி குடிகாளி கொக்கரிசெய்தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள்பலகோடி
திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறிவயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடுதிமிரதிந கரஅமரர் பதிவாழ்வு பெற்றுலவுமுருகோனே
திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசிலடிபரவு பழநிமலை கதிர்காம முற்றுவளர்சிவசமய அறுமுகவ திருவேர கத்திலுறைபெருமாளே.
