உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 211

கறைபடுமு டம்பி ராதெனக்

தாளம்
அங்கதாளம்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2தனதனன தந்த தானனத்தனதனன தந்த தானனத்தனதனன தந்த தானனத் தனதான

பாடல் வரிகள்

கறைபடுமு டம்பி ராதெனக்கருதுதலொ ழிந்து வாயுவைக்கருமவச னங்க ளால்மறித்தனலு஡திக்

கவலைபடு கின்ற யோககற்பனைமருவு சிந்தை போய்விடக்கலகமிடு மஞ்சும் வேரறச்செயல்மாளக்

குறைவறநி றைந்த மோனநிர்க்குணமதுபொ ருந்தி வீடுறக்குருமலைவி ளங்கு ஞானசற்குருநாதா

குமரசர ணென்று கூதளப்புதுமலர்சொ ரிந்து கோமளப்பதயுகள புண்ட ஡ணகமுற்றுணர்வேனோ

சிறைதளைவி ளங்கு பேர்முடிப்புயலுடன டங்க வேபிழைத்திமையவர்கள் தங்க ளூர்புகச்சமராடித்

திமிரமிகு சிந்து வாய்விடச்சிகரிகளும் வெந்து நீறெழத்திகிரிகொள நந்த சூடிகைத்திருமாலும்

பிறைமவுலி மைந்த கோவெனப்பிரமனைமு னிந்து காவலிட்டொருநொடியில் மண்டு சூரனைப்பொருதேறிப்

பெருகுமத கும்ப லாளிதக்கரியெனப்ர சண்ட வாரணப்பிடிதனைம ணந்த சேவகப்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →