Song 211
கறைபடுமு டம்பி ராதெனக்
- Sthalam
- சுவாமி மலை
- Raagam
- யமுனா கல்யாணி
- Thalam
- அங்கதாளம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2தனதனன தந்த தானனத்தனதனன தந்த தானனத்தனதனன தந்த தானனத் தனதான
Lyrics
கறைபடுமு டம்பி ராதெனக்கருதுதலொ ழிந்து வாயுவைக்கருமவச னங்க ளால்மறித்தனலுதிக்
கவலைபடு கின்ற யோககற்பனைமருவு சிந்தை போய்விடக்கலகமிடு மஞ்சும் வேரறச்செயல்மாளக்
குறைவறநி றைந்த மோனநிர்க்குணமதுபொ ருந்தி வீடுறக்குருமலைவி ளங்கு ஞானசற்குருநாதா
குமரசர ணென்று கூதளப்புதுமலர்சொ ரிந்து கோமளப்பதயுகள புண்ட ணகமுற்றுணர்வேனோ
சிறைதளைவி ளங்கு பேர்முடிப்புயலுடன டங்க வேபிழைத்திமையவர்கள் தங்க ளூர்புகச்சமராடித்
திமிரமிகு சிந்து வாய்விடச்சிகரிகளும் வெந்து நீறெழத்திகிரிகொள நந்த சூடிகைத்திருமாலும்
பிறைமவுலி மைந்த கோவெனப்பிரமனைமு னிந்து காவலிட்டொருநொடியில் மண்டு சூரனைப்பொருதேறிப்
பெருகுமத கும்ப லாளிதக்கரியெனப்ர சண்ட வாரணப்பிடிதனைம ணந்த சேவகப்பெருமாளே.
