Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 210

கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனன தந்த தான தனதனன தந்த தானதனதனன தந்த தானதனதான

Lyrics

கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோதுகடலளவு கண்டு மாயமருளாலே

கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்கவினறந டந்து தேயும்வகையேபோய்

இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடுமிடமிடமி தென்று சோர்வுபடையாதே

இசையொடுபு கழந்த போது நழுவியப்ர சண்டர் வாசலிரவுபகல் சென்று வாடியுழல்வேனோ

மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூகமலர்வளநி றைந்த பாளைமல்ருடே

வகைவகையெ ழுந்த சாம வதிமறைவி யந்து பாடமதிநிழலி டுஞ்சு வாமிமலைவாழ்வே

அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாபஅணிமயில்வி ரும்பி யேறுமிளையோனே

அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்ட பாவைஅருள்புதல்வ அண்ட ராஜர்பெருமாளே.

All songs →