பாடல் 1307
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
- தலம்
- பழமுதிர்சோலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)தகதிமி-2, தகிட-1 1/2தனதன தான தனதன தான தனதன தானதனதான
பாடல் வரிகள்
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகிஅகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகிஅவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகிவருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடிவரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரிமகிழ்களி கூரும்வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காமமுடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடுமயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவுபெருமாளே.
