உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1308

இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார இளநகை யாட ஆடி ...... மிகவாதுற்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதன தான தான தனதன தான தான தனதன தான தானதனதான

பாடல் வரிகள்

இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார இளநகை யாட ஆடிமிகவாதுற்

றெதிர்பொரு கோர பார ம்ருகமத கோல கால இணைமுலை மார்பி லேறமதராஜன்

கலவியி லோடி நீடு வெகுவித தாக போக கரணப்ர தாப லீலைமடமாதர்

கலவியின் மூழ்கி யாழு மிழிதொழி லேனு மீது கருதிய ஞான போதமடைவேனோ

கொலைபுரிகாளி சூலி வயரவி நீலி மோடி குலிச குடாரியாயிமகமாயி

குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி குணவதி யால வூணியபிராமி

பலிகொள்க பாலி யோகி பரமகல் யாணி லோக பதிவ்ரதை வேத ஞானிபுதல்வோனே

படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர பழமுதிர் சோலை மேவுபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →