பாடல் 1302
மனைமக்கள் சுற்ற ...... மெனுமாயா
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- ராமப்ரியா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - திஸ்ர ஏகம் (3)தனனத்த தத்ததனதான
பாடல் வரிகள்
மனைமக்கள் சுற்றமெனுமாயா
வலையைக்க டக்கஅறியாதே
வினையிற்செ ருக்கியடிநாயேன்
விழலுக்கி றைத்துவிடலாமோ
சுனையைக்க லக்கிவிளையாடு
சொருபக்கு றத்திமணவாளா
தினநற்ச ரித்ரமுளதேவர்
சிறைவெட்டிவிட்டபெருமாளே.
