பாடல் 1301
பொன்னை விரும்பிய ......பொதுமாதர்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தன்ன தனந்தனதனதான
பாடல் வரிகள்
பொன்னை விரும்பியபொதுமாதர்
புன்மை விரும்பியெதடுமாறும்
என்னை விரும்பிநியொருகால்நின்
எண்ணி விரும்பவுமருள்வாயே
மின்னை விரும்பியசடையாளர்
மெய்யின் விரும்பியகுருநாதா
அன்னை விரும்பியகுறமானை
அண்மி விரும்பியபெருமாளே.
