பாடல் 1300
புத்தகத் தேட்டிற் றீட்டி ...... முடியாது
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- ஆபோகி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (9)தகிடதக-2 1/2, தகதமி-2, தகிட-1 1/2, தகதிமிதக-3தத்தனத் தாத்தத் தாத்ததனதான
பாடல் வரிகள்
புத்தகத் தேட்டிற் றீட்டிமுடியாது
பொற்புறக் கூட்டிக் காட்டியருள்ஞான
வித்தகப் பேற்றைத் தேற்றியருளாலே
மெத்தெனக் கூட்டிக் காக்கநினைவாயே
தத்தைபுக் கோட்டிக் காட்டிலுறைவாளைச்
சற்கரித் தேத்திக் கீர்த்திபெறுவோனே
கைத்தலத் தீக்குப் பார்த்துநுழையாத
கற்பகத் தோப்புக் காத்தபெருமாளே.
