பாடல் 1216
ஆலுமயில் போலுற்ற தோகையர்க ளெமெத்த
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானதன தானத்த தானதன தானத்ததானதன தானத்ததனதான
பாடல் வரிகள்
ஆலுமயில் போலுற்ற தோகையர்க ளெமெத்தஆரவட மேலிட்டமுலைமீதே
ஆனதுகி லேயிட்டு வீதிதனி லேநிற்கஆமவரை யேசற்றுமுரையாதே
வேலுமழ கார்கொற்ற நீலமயில் மேலுற்றுவீறுமுன தார்பத்மமுகமாறு
மேவியிரு பாகத்தும் வாழுமனை மார்தக்கமேதகவு நானித்தமுரையேனோ
நாலுமுக வேதற்கு மாலிலையில் மாலுக்குநாடவரியார்பெற்றவொருபாலா
நாணமுடை யாள்வெற்றி வேடர்குல மீதொக்கநாடுகுயில் பார்மிக்கஎழில்மாது
வேலைவிழி வேடச்சி யார்கணவ னேமத்தவேழமுக வோனுக்குமிளையோனே
வீரமுட னேயுற்ற சூரனணி மார்பத்துவேலைமிக வேவிட்டபெருமாளே.
