பாடல் 1217
இடையித்தனை யுளதத்தைய ரிதழ்துய்த்தவ ...... ரநுபோகம்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனத்தன தனனத்தன தனனத்தனதனதான
பாடல் வரிகள்
இடையித்தனை யுளதத்தைய ரிதழ்துய்த்தவரநுபோகம்
இளகிக்கரை புரளப்புள கிதகற்புரதனபாரம்
உ டன்மற்கடை படுதுற்குண மறநிற்குணவுணர்வாலே
ஒருநிஷ்கள வடிவிற்புக வொருசற்றருள்புரிவாயே
திடமற்றொளிர் நளினப்ரம சிறைபுக்கனனெனவேகுந்
தெதிபட்சண க்ருதபட்சண செகபட்சணனெனவோதும்
விடபட்சணர் திருமைத்துனன் வெருவச்சுரர்பகைமேல்வேல்
விடுவிக்ரம கிரியெட்டையும் விழவெட்டியபெருமாளே.
