பாடல் 1215
ஆல மேற்ற விழியினர் சால நீட்டி யழுதழு
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தாத்த தனதன தான தாத்த தனதனதான தாத்த தனதனதனதான
பாடல் வரிகள்
ஆல மேற்ற விழியினர் சால நீட்டி யழுதழுதாக மாய்க்க முறைமுறைபறைமோதி
ஆடல் பார்க்க நிலையெழு பாடை கூட்டி விரையமயான மேற்றி யுறவினரயலாகக்
கால மாச்சு வருகென ஓலை காட்டி யமபடர்காவ லாக்கி யுயிரதுகொடுபோமுன்
காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழலிணைகாத லாற்க ருதுமுணர்தருவாயே
வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவணவியாழ கோத்ர மருவியமுருகோனே
வேடர் நாட்டில் விளைபுன ஏனல் காத்த சிறுமியைவேட மாற்றி வழிபடுமிளையோனே
ஞால மேத்தி வழிபடு மாறு பேர்க்கு மகவெனநாணல் பூத்த படுகையில்வருவோனே
நாத போற்றி யெனமுது தாதை கேட்க அநுபவஞான வார்த்தை யருளியபெருமாளே.
