உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1214

ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தான தான தனத்தன தான தான தனத்தனதான தான தனத்தனதனதான

பாடல் வரிகள்

ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள்ஆவி சோர வுருக்கிகள்தெருமீதே

யாவ ரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர்ஆல கால விழிச்சிகள்மலைபோலு

மாசி லாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர்வாரியோதி முடிப்பவர்ஒழியாமல்

வாயி லு஡ற லளிப்பவர் நாளு நாளு மினுக்கிகள்வாசல் தேடி நடப்பதுதவிர்வேனோ

ஓசை யான திரைக்கடல் ஏழு ஞால முமுற்றருள்ஈச ரோடுற வுற்றவள்உ மையாயி

யோகி ஞானி பரப்ரமி நீலி நாரணி யுத்தமிஓல மான மறைச்சிசொல்அபிராமி

ஏசி லாத மலைக்கொடி தாய்ம னோமணி சற்குணிஈறி லாதம லைக்கொடிஅருள்பாலா

ஏறு மேனி யொருத்தனும் வேத னான சமர்த்தனும்ஈச னோடு ப்ரியப்படுபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →