பாடல் 1197
வடிகட்டிய தேனென வாயினி
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனத்தன தானன தானனதனனத்தன தானன தானனதனனத்தன தானன தானனதனதான
பாடல் வரிகள்
வடிகட்டிய தேனென வாயினிலுறுதுப்பன வூறலை யார்தரவரைவிற்றிக ழூடலி லேதருமடவார்பால்
அடிபட்டலை பாவநிர் மூடனைமுகடித்தொழி லாமுன நீயுனதடிமைத்தொழி லாகாஎ நாளினிலருள்வாயோ
பொடிபட்டிட ராவணன் மாமுடிசிதறச்சிலை வாளிக ளேகொடுபொருகைக்கள மேவிய மாயவன்மருகோனே
கொடுமைத்தொழி லாகிய கானவர்மகிமைக்கொள வேயவர் வாழ்சிறுகுடிலிற்குற மானொடு மேவியபெருமாளே.
