உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1198

வட்ட முலைக்கச் சவிழ்த்து வைத்துள

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தத்த தனத்தத் தனத்த தத்தனதத்த தனத்தத் தனத்த தத்தனதத்த தனத்தத் தனத்த தத்தனதனதான

பாடல் வரிகள்

வட்ட முலைக்கச் சவிழ்த்து வைத்துளமுத்து வடத்தைக் கழுத்தி லிட்டிருமைக்கு வளைக்கட் குறிப்ப ழுத்தியபொதுமாதர்

மட்டம ளிக்குட் டிருத்தி முத்தணிமெத்தை தனக்குட் செருக்கி வெற்றிலைவைத்த பழுப்பச் சிலைச்சு ருட்கடியிதழ்கோதிக்

கட்டி யணைத்திட் டெடுத்து டுத்திடுபட்டை யவிழ்த்துக் கருத்தி தத்தொடுகற்ற கலைச்சொற் களிற்ப யிற்றுளமுயல்போதுங்

கைக்கு ளிசைத்துப் பிடித்த கட்கமும்வெட்சி மலர்ப்பொற் பதத்தி ரட்சணைகட்டு மணிச்சித் திரத்தி றத்தையுமறவேனே

கொட்ட மிகுத்திட் டரக்கர் பட்டணம்இட்டு நெருப்புக் கொளுத்தி யத்தலைகொட்டை பரப்பச் செருக்க ளத்திடையசுரோரைக்

குத்தி முறித்துக் குடிப்ப ரத்தமும்வெட்டு யழித்துக் கனக்க ளிப்பொடுகொக்கரியிட்டுத் தெரித்த டுப்பனவொருகோடிப்

பட்ட பிணத்தைப் பிடித்தி ழுப்பனசச்சரிகொட்டிட் டடுக்கெ டுப்பனபற்கள் விரித்துச் சிரித்தி ருப்பனவெகுபூதம்

பட்சி பறக்கத் திசைக்குள் மத்தளம்வெற்றி முழக்கிக் கொடிப்பி டித்தயில்பட்டற விட்டுத் துரத்தி வெட்டியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →