பாடல் 1196
மோது மறலியொரு கோடி வேற்படை
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- ஹம்ஸத்வனி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (7 1/2)தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமி-2தான தனதனன தான தாத்தனதான தனதனன தான தாத்தனதான தனதனன தான தாத்தனதனதான
பாடல் வரிகள்
மோது மறலியொரு கோடி வேற்படைகூடி முடுகியெம தாவி பாழ்த்திடமோக முடையவெகு மாதர் கூட்டமுமயலாரும்
மூளு மளவில்விசை மேல்வி ழாப்பரிதாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடுமோக வினையில்நெடு நாளின் மூத்தவரிளையோர்கள்
ஏது கருமமிவர் சாவெ னாச்சிலர்கூடி நடவுமிடு காடெ னாக்கடிதேழு நரகினிடை வீழ்மெ னாப்பொறியறுபாவி
ஏழு புவனமிகு வான நாட்டவர்சூழ முநிவர்கிளை தாமு மேத்திடஈச னருள்குமர வேத மார்த்தெழவருவாயே
சூது பொருதரும னாடு தோற்றிருவாறு வருஷம்வன வாச மேற்றியல்தோகை யுடனுமெவி ராட ராச்சியமுறைநாளிற்
சூறை நிரைகொடவ ரேக மீட்டெதிராளு முரிமைதரு மாறு கேட்டொருதூது செலஅடுவ லாண்மை தாக்குவனெனமீள
வாது சமர்திருத ரான ராட்டிரராஜ குமரர்துரியோத னாற்பிறர்மாள நிருபரொடு சேனை தூட்படவரிசாப
வாகை விஜயனடல் வாசி பூட்டியதேரை முடுகுநெடு மால்ப ராக்ரமமாயன் மருகஅமர் நாடர் பார்த்திபபெருமாளே.
