பாடல் 1192
முருகு லாவிய மைப்பாவு வார்குழல்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தானன தத்தான தானனதனன தானன தத்தான தானனதனன தானன தத்தான தானனதனதான
பாடல் வரிகள்
முருகு லாவிய மைப்பாவு வார்குழல்முளரிவாய்நெகிழ் வித்தார வேல்விழிமுடுகு வோர்குலை வித்தான கோடேனுமுலையாலே
முறைமை சேர்கெட மைத்தார்வு வார்கடல்முடுகு வோரென எய்த்தோடி யாகமுமொழியும் வேறிடு பித்தேறி னாரெனுமுயல்வேகொண்
டுருகு வார்சிக சிற்றாம னோலயமுயிரு மாகமு மொத்தாசை யோடுளமுருகி தீமெழு கிட்டான தோவெனவுரையாநண்
புலக வாவொழி வித்தார் மனோலயமுணர்வு நீடிய பொற்பாத சேவடியுலவு நீயெனை வைத்தாள வேயருள்தருவாயே
குருகு லாவிய நற்றாழி சூழ்நகர்குமர னேமுனை வெற்பார் பராபரைகுழக பூசுரர் மெய்க்காணும் வீரர்தம்வடிவேலா
குறவர் சீர்மக ளைத்தேடி வாடியகுழையு நீள்கர வைத்தோடி யேயவர்குடியி லேமயி லைக்கொடு சோதியவுரவோனே
மருகு மாமது ரைக்கூடல் மால்வரைவளைவு ளாகிய நக்கீர ரோதியவளகை சேர்தமி ழுக்காக நீடியகரவோனே
மதிய மேவிய சுற்றாத வேணியர்மகிழ நீநொடி யற்றான போதினில்மயிலை நீடுல கைச்சூழ வேவியபெருமாளே.
