பாடல் 1193
முலைமேலிற் கலிங்க மொன்றிட
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனானத் தனந்த தந்தனதனனானத் தனந்த தந்தனதனனானத் தனந்த தந்தனதனதான
பாடல் வரிகள்
முலைமேலிற் கலிங்க மொன்றிடமுதல்வானிற் பிறந்த மின்பிறைநுதல்மேல்முத் தரும்ப புந்தியிலிதமார
முகநேசித் திலங்க வும்பலவிநன்முசிப் புரண்ட வண்கடல்முரணோசைக் கமைந்த வன்சரமென்முவா
மலர்போலச் சிவந்த செங்கணில்மருள்கூர்கைக் கிருண்ட அஞ்சனம்வழுவாமற் புனைந்து திண்கயமெனநாடி
வருமாதர்க் கிரங்கி நெஞ்சமுமயலாகிப் பரந்து நின்செயல்மருவாமற் கலங்கும் வஞ்சகமொழியாதோ
தொலையாநற் றவங்க ணின்றுனைநிலையாகப் புகழ்ந்து கொண்டுளஅடியாருட் டுலங்கி நின்றருள்துணைவேளே
துடிநேரொத் திலங்கு மென்கொடியிடைதோகைக் கிசைந்த வொண்டொடிசுரர்வாழப் பிறந்த சுந்தரிமணவாளா
மலைமாளப் பிளந்த செங்கையில்வடிவேலைக் கொடந்த வஞ்சகவடிவாகக் கரந்து வந்தமர்பொருசூரன்
வலிமாளத் துரந்த வன்திறல்முருகாமற் பொருந்து திண்புயவடிவாமற் றநந்த மிந்திரர்பெருமாளே.
