பாடல் 1191
முத்தமு லாவு தனத்தியர் சித்தச னாணை செலுத்திகள்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்தன தான தனத்தன தத்தன தான தனத்தனதத்தன தான தனத்தனதனதான
பாடல் வரிகள்
முத்தமு லாவு தனத்தியர் சித்தச னாணை செலுத்திகள்முத்தமி டாம னுருக்கிகளிளைஞோர்பால்
முட்டவி லாவி மருட்டிகள் நெட்டிலை வேலின் விழிச்சியர்முப்பது கோடி மனத்தியரநுராகத்
தத்தைக ளாசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள்தப்புறு மாறக மெத்திகளளவேநான்
தட்டழி யாது திருப்புகழ் கற்கவு மோதவு முத்தமிழ்தத்துவ ஞான மெனக்கருள்புரிவாயே
மத்தக யானை யுரித்தவர் பெற்றகு மார இலட்சுமிமைத்துன னாகிய விக்ரமன்மருகோனே
வற்றிட வாரிதி முற்றிய வெற்றிகொள் சூரர் பதைப்புறவற்புறு வேலைவி டுத்தருளிளையோனே
சித்திர மான குறத்தியை யுற்றொரு போது புனத்திடைசிக்கென வேதழு விப்புணர்மணவாளா
செச்சையு லாவு பதத்தின மெய்த்தவர் வாழ்வு பெறத்தருசித்தவி சாக வியற்சுரர்பெருமாளே.
