பாடல் 1014
படிதனி லுறவெனு மனைவர்கள் பரிவொடு
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தனதன தனதன தனதனதத்தத் தத்தன தத்தத் தத்தனதந்ததான
பாடல் வரிகள்
படிதனி லுறவெனு மனைவர்கள் பரிவொடுபக்கத் திற்பல கத்திட் டுத்துயர்கொண்டுபாவப்
பணைமர விறகுடை யழலிடை யுடலதுபற்றக் கொட்டுகள் தட்டிச் சுட்டலையொன்றியேகக்
கடிசம னுயிர்தனை யிருவிழி யனலதுகக்கச் சிக்கென முட்டிக் கட்டியுடன்றுபோமுன்
கதிதரு முருகனு மெனநினை நினைபவர்கற்பிற் புக்கறி வொக்கக் கற்பதுதந்திடாயோ
வடகிரிதொளைபட அலைகடல் சுவறிடமற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும்வென்றிவாய
வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபடமட்டித் திட்டுயர் கொக்கைக் குத்திமலைந்தவீரா
அடர்சடை மிசைமதி யலைஜல மதுபுனைஅத்தர்க் குப்பொருள் கற்பித் துப்புகழ்கொண்டவாழ்வே
அடியுக முடியினும் வடிவுட னெழுமவுனத்திற் பற்றுறு நித்தச் சுத்தர்கள்தம்பிரானே.
