பாடல் 1015
விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழி
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தனதன தனதன தனதன தனதன தனதனதத்தத் தத்தன தத்தத் தத்தனதந்ததான
பாடல் வரிகள்
விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழிவித்தைத் குப்பக ரொப்புச் சற்றிலையென்றுபேசும்
விரகுடை வனிதைய ரணைமிசை யுருகிய வெகுமுக கலவியில்இச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டுவுழன்றுவாடும்
நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளதுகட்டிச் சிக்கென வொத்திக் கைக்கொடுகொண்டுபோயே
நரகதில் விடுமெனு மளவினி லிலகிய நறைகமழ் திருவடிமுத்திக் குட்படு நித்யத் தத்துவம்வந்திடாதோ
இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி யிருபது திரள்புயமற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடுநஞ்சுவாளி
எரியெழ முடுகிய சிலையின ரழகொழு கியல்சிறு வினைமகள்பச்சைப் பட்சித னைக்கைப் பற்றிடுமிந்த்ரலோகா
வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபடமைக்கட் பெற்றிடு முக்ரக் கட்செவியஞ்சசூரன்
மணிமுடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிடமுட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்தியதம்பிரானே.
