பாடல் 1013
முகமுமி னுக்கிப் பெருங்க ருங்குழல்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதந்ததான
பாடல் வரிகள்
முகமுமி னுக்கிப் பெருங்க ருங்குழல்முகிலைய விழ்த்துச் செருந்தி சண்பகமுடியநி றைத்துத் ததும்பி வந்தடிமுன்பினாக
முலையைய சைத்துத் திருந்த முன்தரிகலையைநெ கிழ்த்துப் புனைந்து வஞ்சகமுறுவல்வி ளைத்துத் துணிந்து தந்தெருமுன்றிலுடே
மகளிர்வ ரப்பிற் சிறந்த பந்தியின்மதனனு நிற்கக் கொளுந்து வெண்பிறைவடவையெ றிக்கத் திரண்டு பண்டனைவண்டுபாட
மலயநி லத்துப் பிறந்த தென்றலுநிலைகுலை யத்தொட் டுடம்பு புண்செயமயலைய ளிக்கக் குழைந்து சிந்தைமலங்கலாமோ
பகலவன் மட்கப் புகுந்து கந்தரககனமு கட்டைப் பிளந்து மந்தரபருவரை யொக்கச் சுழன்று பின்புபறந்துபோகப்
பணமணி பட்சத் துரங்க முந்தனிமுடுகின டத்திக் கிழிந்து விந்தெழுபரவைய ரற்றப் ப்ரபஞ்ச நின்றுபயந்துவாடக்
குகனென முக்கட் சயம்பு வும்ப்ரியமிகவசு ரர்க்குக் குரம்பை வந்தருகுறவமர் குத்திப் பொருங்கொ டும்படைவென்றவேளே
குழைசயை யொப்பற் றிருந்த சங்கரிகவுரியெ டுத்துப் பரிந்து கொங்கையில்குணவமு துய்க்கத் தெளிந்து கொண்டருள்தம்பிரானே.
