உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 998

நாலி ரண்டித ழாலே கோலிய

ராகம்
துர்கா

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - அங்கதாளம் (7 1/2)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தான தந்தன தானா தானனதான தந்தன தானா தானனதான தந்தன தானா தானனதனதான

பாடல் வரிகள்

நாலி ரண்டித ழாலே கோலியஞால முண்டக மேலே தானிளஞாயி றென்றுறு கோலா காலனுமதின்மேலே

ஞால முண்டபி ராணா தாரனும்யோக மந்திர மூலா தாரனுநாடி நின்றப்ர பாவா காரனுநடுவாக

மேலி ருந்தகி ரீடா பீடமுநூல றிந்தம ணீமா மாடமுமேத கும்ப்ரபை கோடா கோடியுமிடமாக

வீசி நின்றுள தூபா தீபவிசால மண்டப மீதே யேறியவீர பண்டித வீரா சாரியவினைதீராய்

ஆல கந்தரி மோடா மோடிகுமாரி பிங்கலை நானா தேசியமோகி மங்கலை லோகா லோகியெவுயிர்பாலும்

ஆன சம்ப்ரமி மாதா மாதவிஆதி யம்பகை ஞாதா வானவராட மன்றினி லாடா நாடியஅபிராமி

கால சங்கரி சீலா சீலித்ரிசூலி மந்த்ரசு பாஷா பாஷணிகாள கண்டிக பாலீ மாலினிகலியாணி

காம தந்திர லீலா லோகினிவாம தந்திர நூலாய் வாள்சிவகாம சுந்தரி வாழ்வே தேவர்கள்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →