பாடல் 999
போதிலி ருந்துவி டாச்சதுர் வேதமொ ழிந்தவ னாற்புளி
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தனதானன தந்தன தாத்தனதனதான
பாடல் வரிகள்
போதிலி ருந்துவி டாச்சதுர் வேதமொ ழிந்தவ னாற்புளினாகமு கந்தவ னாற்றெரிவரிதான
போதுயர் செந்தழ லாப்பெரு வானநி றைந்த விடாப்புகழாளன ருஞ்சிவ கீர்த்தியனெறிகாண
ஆதர வின்பருள் மாக்குரு நாதனெ னும்படி போற்றிடஆனப தங்களை நாக்கருதிடவேயென்
ஆசையெ ணும்படி மேற்கவி பாடுமி தம்பல பார்த்தடியேனும றிந்துனை யேத்துவதொருநாளே
காதட ரும்படி போய்ப்பல பூசலி டுங்கய லாற்கனிவாயித ழின்சுவை யாற்பயில்குறமாதின்
காரட ருங்குழ லாற்கிரி யானத னங்களி னாற்கலைமேவும ருங்கத னாற்செறிகுழையோலை
சாதன மென்றுரை யாப்பரி தாபமெ னும்படி வாய்த்திடுமாறிம னந்தள ராத்தனிதிரிவோனே
சாகர மன்றெரி யாக்கொடு சூரரு கும்படி யாத்திணிவேலையு ரம்பெற வோட்டியபெருமாளே.
